search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆங் சாங் சூகி"

    மியான்மர் நாட்டின் தலைவர் ஆங் சாங் சூகி சிறைவாசம் இருந்த வீடு விற்பனை வருகிறது. #AungSanSuuKyi

    யங்கூன்:

    மியான்மர் நாட்டின் தலைவர் ஆங் சாங் சூகி ராணுவத்தால் கைது செய்யப்பட்டு 15 ஆண்டுகள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது குடும்பத்துக்கு சொந்தமான அந்த வீடு யங்கூனில் இன்யா ஏரிக்கரையில் உள்ளது. 2 அடுக்கு மாடியை கொண்ட இந்த வீடு தற்போது பழுதடைந்து இடிந்த நிலையில் உள்ளது.

    இந்த வீட்டின் மீது ஆங் சாங் சூகியின் அண்ணன் ஆங் சாங் ஓ வழக்கு தொடர்ந்துள்ளார். அதன் மீது தனக்கும் உரிமை உள்ளது என்றும், அதை ஏலம் விட்டு வரும் பணத்தில் தனக்கு பங்கு தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடு ரூ.670 கோடி விலை போகும் என கணக்கிடப்பட்டுள்ளது. #AungSanSuuKyi

    மியான்மர் ஆலோசகர் ஆங் சாங் சூகி மற்றும் ராணுவத் தளபதி ஜெனரல் மன் ஆங் ஹிலிங் ஆகியோரை இன்று சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசியுள்ளார். #SushmaSwaraj #AungSanSuuKyi
    நே பை தா:

    இந்தியாவின் மிக முக்கிய அண்டை நாடாக விளங்கும் மியான்மர், இந்தியாவுடனான எல்லையை 1640 கி.மீட்டர் தூரத்துக்கு பகிர்ந்து உள்ளது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாகலாந்து, மணிப்பூர் ஆகியவை மியான்மர் நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ளதால், மியான்மருடனான உறவு முக்கியமான ஒன்றாகும்.

    இதற்கிடையே, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 2 நாள் பயணமாக மியான்மருக்கு நேற்று சென்றார். மியான்மர் தலைநகர் நே பை தா சென்றடைந்த சுஷ்மா சுவராஜுக்கு, மியான்மருக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி, மியான்மர் வெளியுறவு கொள்கை மந்திரி உ மியிண்ட் து உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதைஅடுத்து, மியான்மர் அதிபர் வின் மிண்டை வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசினார்.

    இந்நிலையில், மியான்மர் ஆரசு ஆலோசகர் ஆங் சாங் சூகி மற்றும் மியான்மர் ராணுவத் தளபதி ஜெனரல் மன் ஆங் ஹிலிங் ஆகியோரை சுஷ்மா சுவராஜ் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இந்தியா-மியான்மர் இடையிலான 7 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். #SushmaSwaraj #AungSanSuuKyi
    ×